பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௨

முகவுரை


செய்குவம் கொல்லோ நல்வினை எனவே
ஐய மறாஅர் கசடு ஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

என வரும் புறநானூற்றுச் செய்யுளும் (214) ஒருவித எச்சரிக்கையையும் துணிவையும் எனக்குத் தந்தது. மேலும், இத்தகைய பெரிய வேலையில் ஈடுபட்டால் மனமும் ஒருவழிப்படும், ஈசனும் கமது உள்ளத்தே குடிகொள்வான், நோயும் பிணியும் அணுகா என ஒரு திடபக்தி உண்டாயிற்று. “நோயும் பிணியும் தொழிலர் பால் நீக்கி,” -(381-5) என்னும் தேவார அருமை அடியும் பொய்க்குமோ?

இனி அச்சிட எஞ்சி நிற்கும் பாகங்களும் எனது வாழ்காளில் அச்சேறிவிட்டால்-

இந்நா ளெனக்குப் பயப்பட்ட திப்பிறவி
இந்நா ளெனக்குப் பயப்பட்டதி யான் செய்தவம்
இந்நா ளெனக்குப் பயப்பட்ட தென்னறிவும்
இந்நாள் தணிகேசர் என்னையுங்கண் பார்த்தனரே-

எனக் களிகூர்ந்து அவர் திருவருட்பேற்றினை வியந்து மகிழ்வேன்.

8. இக் கஷ்டகாலத்தில் இந்நூலை அச்சிட்டுதவிய சென்ட்ரல் ஆர்ட் அச்சுக்கூடத் தலைவரவர்களுக்கு என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகின்றேன்.

9. இப் பகுதியை அச்சேற்றி வைத்த எமதண்ணல் தணிகை நாயகர் வாழ்க! வாழ்க! வாழ்க!


சென்னை,

292, லிங்க செட்டித் தெரு,
9-6-1946.

வ. சு. செங்கல்வராய பிள்ளை.