பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

௧௧


ஒருவனே உதவியின்றி எழுதிய காரணத்தாலும், இலக்கண இலக்கிய பாண்டித்தியம் இல்லாமையாலும், முக்குண வசத்திற் பட்டுள்ளமையாலும் எத்தகைய குறைகளும் இந்நூலிற் காணலாகும். அவைதமைப் பெரியோர் பொறுத்தருள வேண்டுகின்றேன். ஆராய்ச்சிக் குறிப்புக்கள் எழுதி வந்திருந்தபொழுது இடையிடையே இதுவும் இருந்தால் நல்லது, இப்படியிருந்தால் நல்லது, இது அநாவசியம் - எனப் பலவித யோசனைகள் கலந்த காரணத்தாற் சில எண்கள் விடுபடல், சில விஷயங்கள் விடுபடல், கூறியது கூறல் ஆய பலவகைக் குற்றங்களும் காணலாகும்; எனினும் முக்கிய விஷயங்களில் ஒன்றும் விடுபட்டிருக்காது என்றே எண்ணுகின்றேன்; பின்னும், எனக்குப் பொருள் விளங்கின அளவில்தான் இவ்வாராய்ச்சி நிற்கின்றது. பொருள் விளங்காத பாடல்களும் பாடற் பகுதிகளும் ஆராயமுடியாது விடப்பட்டன. தெள்ளறிவிலாமையால் விபரீதப் பொருளும் இருக்கலாம். ஆன்றோர் அவையெலாம் பொறுத்தருள வேண்டுகின்றேன். இத்துனைக் குறைகளுடன் ஆராய்ச்சியை எழுதத் துணிவு தந்தது [திருக்குறள் 611]-

அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்

-என்னும் நாயனார் திருவாக்கே.

நல்வினை ஒன்று செய்யப் புகின் இது நம்மால் முடியுமா என்னும் ஓர் ஐயப்பாடு தெளிந்த உள்ளத்தவர்களுக்கு வரவே கூடாது என்றும் பெரிய காரியம் விரும்பின ஒருவனுக்கு அப் பெரிய காரியம் கைகூடுதலும் சிறிய காரியம் விரும்பின ஒருவனுக்கு அச்சிறிய காரியங் கூடக் கைகூடாது போதலும் உலக இயற்கையாம் என்னும் பொருள் கொண்டதாய -


‘நுகர் வித்தக மாகும் என்று உமை மொழியிற் பொழி பாலை யுண்டிடு நுவல் மெய்ப்புள பாலன்’ -திருப்புகழ் 110.

‘வெற்புத் தருஞ் செழுங்கொடி-பணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறுகின்ற பாலைப் பல திசை மெச்சத் தெரிந்த செந்தமிழ் பகர்- என இச்சித் துகந்து கொண்டருள் பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் தம்பிரானே’

-திருப்புகழ் 136.