பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

சம் பிரதேசம், இந்த அல்லது அந்த ராஜ்யத்தில் இணைந்துவிட்டாலும், மக்கள் பொறுமையிழந்து கலகம் விளைத்து, இன்றியமையாத தேசீய ஒற்றுமையைக் குலைக்கக்கூடாதென்றும் பெருந்தகைமையோடு புத்திமதி கூறி வேண்டிக்கொள்கிறார்கள். இந்த மேலிடத்துத் தெய்வங்களிடம்தான், நியாயம் கோரி சுப்ரமணியமும் பனம்பள்ளியும் 'கேள்' கட்டுகளுடன் டில்லிக்கு ஓடியிருக்கிறார்கள்.

கொள்கை அடிப்படையில் நியாயப் பிடிப்பு இல்லாததால். தெளிவின்றி குழம்பிய மனத்தராய் மக்கள் என்னவாகுமோ ஏதாகுமோ என்று டில்லியை நோக்கி, நிலைகுத்தியகண்களோடு நிற்கிறார்கள்.

இது நியாயமா?

காஸர்கோடு தாலூகாபற்றி காங்கிரஸ்காரர் எடுத்த நிலை என்ன? காஸர்கோடு தாலூகாவில்—தகராறுக்குரிய பிரதேசத்தில்—மலையாளிகள் 100க்கு 55 பேரும், கன்னடியர்கள் 100க்கு 9 பேரும் வாழ்கிறார்கள். 55 பேருள்ள மலையாளிகளுக்கு கிடைக்கக்கூடாதென்றும் 9 பேருள்ள கன்னடியர்களுக்கே கிடைக்கவேண்டும் என்றும் மொழியல்லாத காரணங்களைப் பேசி சுப்ரமணியம், காசர்கோடு கன்னட ராஜ்யத்தோடு இணையவேண்டுமென்று விவாதித்தார். சட்டசபையில் காங்கிரஸ் தமிழ் எம்.எல்.ஏ.க்கள் மலையாளிகளுக்கு விரோதமாக கன்னடத்தாரோடு இணைந்து வாக்களித்தார்கள். இதற்குக் கைம்மாறாக, தேவிகுளம்-பீர்மேடு விஷயத்தில் கன்னட எம்.எல்.ஏ.க்கள், மலையாளிகளுக்கு விரோதமாக தமிழர்களோடு இணைந்து வாக்களித்தனர்.

பெரியாற்றுத் தண்ணீர் ஆதிக்கம் சென்னைக்கு, கூடலூ தாலூகா முழுவடிவமாக சென்னைக்கு, காசர்கோடு கன்னட ராஜ்யத்திற்கு என்று தமிழ்நாடு காங்கிரஸ்காரர் சட்டசபையில் கடைப்பிடித்த கொள்கை மலையாளிகளிடம் தமிழர்மீது பகைமையை வளர்க்க உதவுமா? அல்லது தேவிகுளம்-பீர்மேடு வாழ் சுமார் இரண்டு லட்சம் தமிழர்களின் உரிமைக் குரலை கேரள மக்கள் பொருட்படுத்த உதவுமா? என்பதை தமிழ்ப் பொதுமக்கள் நன்றாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாடுகளிடையில் பஞ்சசீலக் கொள்கையைப் பரப்பவேண்டிய காங்கிரஸ்காரர்கள், ராஜ்யங்களிடையில் "தான் வாழ வித்தெடுக்கும் கொள்கை"யைப் பரப்பினால், தேவிகுளம்-பீர் மேடுப் பிரச்னை சுமுகமாகத் தீருமா?

ஆற்றுத் தண்ணீரும் ஆதாயவாதிகளும்

சட்டசபையில் தேவிகுளம் பீர்மேடுபற்றிய திருத்தம் கொண்டு வந்தவர் ஆர்.வி.சுவாமிநாதன். இவர் பேசும்போது, மொழிவழி ராஜ்யக் கோரிக்கை தவறு என்றும் வல்லபாய் படேல் இருந்தால்