பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கள் முழுத் தோசைகளாக தாய்த் தமிழகத்தோடு இணையவேண்டும் என்பது தி.த.நா.காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கை. கமிஷன் சிபார்சு செய்துள்ள ஐந்து தாலுக்காக்கள் நீங்கலாக, மிகத் தகராறுக்குரிய நெய்யாற்றின்கரை, தேவிகுளம், பிர்மேடு, சித்தூர் ஆகிய நான்கு தாலுக்காக்களிலுள்ள தமிழ்ப் பிரதேசங்களை கிராம அடிப்படையில் சென்னையோடு இணைத்தால் போதுமென்றும் மறந்தும் இவர்கள் சொன்னதில்லை.

ஒன்பது தாலூகா வாதிகள்

இத்தகைய பிடிவாதமான ஒன்பது தாலூகா வாதிகளின் இன்றைய நிலை என்ன? லோக் சபையில் தி.த.நா. காங்கிரசின் தலைவரான நேசமணி, மாற்றாரும் மதிகலங்கும்படி, சரித்திரச் சான்றுகளையும் புள்ளி விவரங்களையும் பொழிந்து, தேவிகுளம், பீர்மேட்டுக்காக அபாரமாக வாதாடினார். அவருடைய சகாக்கள் தி.த.நா. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 'தேவிகுளம்-பீர்மேடுபற்றி மூச்சுவிடக்கூடாதென்பதோடு மட்டுமல்ல. தென் தாலூகாக்களைப் பொறுத்தமட்டில் கமிஷன் சிபார்சை ஒப்புக்கொள்ளமாட்டோம். கேரளத்திலிருந்து பிரியவிடமாட்டோம் என்று பிடிசாதனையாய் நிற்கும், பனம்பள்ளியின், திருகொச்சி காங்கிரஸ் சர்க்காருக்கு சட்டசபையில் முட்டுக் குத்தியாக நின்று இன்றும் ஆதரவளிக்கிறார்கள். திரு-கொச்சி காங்கிரஸ் சட்டசபை கட்சியில் தி. த. நா. கா. எம். எல். ஏ. க்கள் அங்கம் வகித்து காங்கிரஸை ஆதரித்துக்கொண்டே, தேவிகுளம் பீர்மேடு தமிழகத்தோடு இணைய வேண்டுமென்று கோருவது, தேவிகுளம் - பீர்மேடு தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவுமா? இதற்கும் மேலாக' இரணியலில் நடந்த தி.த.நா.காங்கிரஸ் கூட்டத்தில் நேசமணி, தேவிகுளம் பீர்மேடு தொழிலாளர் தலைவர் குப்புசாமிக்குப் பதில் கூறுகையில், "தேவிகுளம் பீர்மேடு பற்றி மேலிடம் பாதகமாகத் தீர்ப்புக் கூறுமானால், தி.த.நா.காங்கிரஸ், சர்க்காரையோ காங்கிரஸையோ, காமராஜரையோ எதிர்த்துப் போராடாது" என்ற தமது அந்தரங்கத்தை வெளியிட்டாராம். அதை குப்புசாமியே என்னிடம், ஹோட்டல் எவரெஸ்டில் நேரில் கூறினார்.

தி.த.நா.காங்கிரஸ் தலைமையின் இந்தத் துரோகப் போக்கை தேவிகுளம் - பீர்மேடு த .நா . காங்கிரஸ் செயலாளர் ராமய்யா வெளியில் சொல்லாமல் அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறார். அதேபொழுதில், சென்னை கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்களின் நடுநிலைமை வகித்த துரோகத்தனத்தையும்' 'ஜீவானந்தம் வாக்குத் தவறியதையும் பத்திரிகைகளுக்கு அறிக்கைவிட்டு, உலகறியச் செய்கிறார் !

ஏன்? அவர் ஒரு தி .த.நா.காங்கிரஸ்காரர். பழியை கம்யூனிஸ்டுகள் தலையில் போட்டு, தமிழர்களுக்காகப் பாடுபட்டுத் தலைமை தாங்குவதான பரம்பரையை அவர் கைவிட முடியுமா?