பக்கம்:தைத் திங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 தைத் திங்கள்

பிருந்த செய்தியைப் பாகவதத்தால் அறியலாம். சிவபெருமானின் மனைவியாகிய உமையம்மையே பாவை நோன்பிருந்ததாகச் சைவ நூல்கள் கூறு கின்றன. காஞ்சியை யடுத்த பாலாற்றில் உமையம்மையார் சிவன்போல் மணலால் பாவை செய்து வழிபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென வெள்ளம் வந்துவிட, தாம் நீங்காமல் பாவையை அணைத்துக் கொள்ள, வெள்ளம் வழிவிட்டு வளைந்து சென்றதாம்.

உமையம்மையார் முதலியோரைப் பற்றிய செய்திகள் கற்பனை என்று கூறினும், அந்தக்காலத்தில் கன்னியர் வைகறையில் நீராடிப் பாவை நோன்பு நோற்றனர் என்னும் உண்மையை மறுக்க முடியாது. இதற்குச் சான்று பகர,

"வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ” (2)

என்னும் ஆண்டாள் திருப்பாவைப் பாடல் ஒன்று போதுமே! பாவை-பாவை நோன்பு; கிரிசை - கிரியை-பணி;'பாவைக்குச் செய்யும் கிரிசைகள்' என்றால், பாவை நோன்புக்காகச் செய்யும் பணிகள் என்று பொருளாம்.

நீராடல் தொடர்பு:

பாவைப் பாட்டும் பாவை விளையாட்டும் பாவை நோன்பும் ஆகிய மூன்றும் நீராடுதலுடன் தொடர் புடையனவாய்த் தோன்றுகின்றன. 'மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்' என்னும் ஆண்டாளின் திருப்பாவைப் பாட்டும், 'மார்கழிநீர் ஆடேலோ ரெம்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/109&oldid=1321657" இலிருந்து மீள்விக்கப்பட்டது