பக்கம்:தைத் திங்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார் 91

ஏங்குகிறாள். அவளால் நினைக்கப்பட்ட மகளிர் பலருள் குறிப்பிட்ட ஒருத்தியின் வரலாறு வருமாறு:-

காவிரிக்கரையில் கன்னியர் பலர் மணலால் பாவை செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்; அப்போது ஒருத்தி தனது மணல் பாவையோடு மிகவும் ஈடுபட்டி ருந்தபோது, மற்ற கன்னியர் அவளை நோக்கி, 'இந்தப் பாவை தான் இவள் கணவன்' என்று கேலி செய்துகொண்டே புறப்பட்டுச் சென்றார்களாம். அவர்கள் அந்தப் பாவையைத் தன் கணவன் என வரித்து விட்டதால், அவள் அப்பாவையை விட்டுப் பிரிய மனமில்லாதவளாய், திடீரெனப் பெருகி வரும் நீரால் அப்பாவை அழிந்துவிடா வண்ணம் காத்து நின்று நோன்பு கொண்டாளாம். அவள் விரும்பியபடியே, தண்ணீர் அப்பாவையை அழிக்காமல் சுற்றி வளைந்து சென்றதாம். இந்த உருக்கமான வரலாற்றை, சிலப்பதி காரம்-வஞ்சின மாலையில் உள்ள,

"....பொன்னிக்
கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று உரைசெய்த மாதரொடும் போகாள் திரைவந்து அழியாது சூழ்போக ஆங்குந்தி நின்ற
வரியார் அகலல்குல் மாதர்"

என்னும் பகுதி அழகுபெற அறிவிக்கிறது. இந்த வரலாறு பட்டினத்துப் பிள்ளை புராணத்திலும் கூறப் பட்டுள்ளது.

பாவை செய்து வழிபட்டு நோன்பு கொள்வது பண்டை மரபு. ஆயர் கன்னியர் கார்த்தியாயினி தேவி போல் மணலால் பாவை செய்து வழிபட்டு நோன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/108&oldid=1323358" இலிருந்து மீள்விக்கப்பட்டது