பக்கம்:தைத் திங்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார் 95

ஒருத்தியை மற்றொருத்தி எழுப்பிச் செல்கிறாள். பாவை நோன்புக்கும் நீராடுதலுக்கும் உரிய நெருங்கிய தொடர்பை உறுதி செய்ய இதனினும் வேறு என்ன சான்று வேண்டும்?

ஆதிரை நீராடல்:

மார்கழித் திங்களில் ஆதிரை நாளில் நீராடுதல் ஒரு நோன்பாகக் கருதப்படுகிறது. இந்தத் திங்களில் ஆதிரையும் முழுநிலாப் பருவமும் ஒரே நாளில் இணைந்து வரும். அதனால் மார்கழி ஆதிரை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சிதம்பரம் எனப்படும் தில்லையில் கூத்தரசப் (நடராசப்) பெருமானுக்கு மார்கழித் திருவாதிரை நாளில் 'மார்கழித் தரிசனம்' என்னும் பெயரில் மிகப் பெரிய விழா நடைபெறுவது நாடறிந்ததே. இந்த நாளில் சிவன் கோயில் உள்ள எல்லா ஊர்களிலுமே திருவாதிரை விழா நடைபெறுவதுண்டு. திருவாதிரை நாளில் வீடுகளில் இனிப்புக் களி செய்து இறை வனுக்குப் படைப்பர். இதற்குத் 'திருவாதிரைக் களி' என்று பெயராம்.

ஆதிரை நாள் சிவனுக்கு மிகவும் உகந்த நாளாம், அதனால் அவன் 'ஆதிரையான்' என்றும் 'ஆதிரை முதல்வன்' என்றும் பெயர் வழங்கப்பட்டுள்ளான். இதனைப் பரிபாடலில் உள்ள,

"ஆதிரை முதல்வனிற் கிளந்த
நாதர் பன்னொருவரும் நன்றிசை காப்போரும்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/112&oldid=1321587" இலிருந்து மீள்விக்கப்பட்டது