பக்கம்:தைத் திங்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

117


பன்னிரண்டு இராசிகளுக்குள் தைத் திங்களுக்கு உரிய மகா இராசியிலும், ஆடித் திங்களுக்கு உரிய கடக இராசியிலுமே ஞாயிறு முறையே வடக்கும் தெற்குமாகத் திசை மாறுவதால், பன்னிரண்டு சங்கிராந்திகளுக்குள் மகர சங்கிராந்தியும் கடக சங்கிராந்தியுமே சிறப்பாகப் போற்றப் பெறுகின்றன. இவ்விரண்டினுள் மகர சங்கிராந்தியாகிய தைத் திங்கள் தொடக்கம் மிகவும் சிறப்பாகப் போற்றப் படுவதற்கு உரிய காரணத்தை இனி ஆராய்வோம்:

தேவர் பகல்-இரவு:

மாந்தராகிய நமது ஓராண்டு என்பது தேவர்கட்கு ஒருநாள் என்று புராணங்களில் புகலப்பட்டுள்ளது. நமக்குத் தை முதலாக ஆனி ஈறாக உள்ள ஆறு திங்கள் காலம் தேவர்க்குப் பகல்பொழுதாம்.எனவே உத்தராயணமாகிய வடசெலவுக் காலம் தேவரின் பகல் எனவும். தட்சணாயண மாகிய தென் செலவுக் காலம் தேவரின் இரவு எனவும் கொள்ளவேண்டும். அங்ஙனமெனில், நமக்கு ஞாயிறு தோன்றும் காலைப் பொழுது போல, தேவர்க்குத் தைத்திங்கள் தொடக்கம் காலைப் பொழுதாகும். இரவு மறைந்து பகல் தோன்றுங்கால் அனைவருக்கும் மகிழ்ச்சியே யல்லவா?


   'உலகம் உவப்ப வலனேர்ப்பு திரிதரு
    பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாங்கு'

என்னும் முருகாற்றுப் படைப் பாடலில், ஞாயிறு தோன்றும்போது உலகம் முழுவதும் உவப்பு அடைவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/134&oldid=1323725" இலிருந்து மீள்விக்கப்பட்டது