பக்கம்:தைத் திங்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

119


பழைய நம்பிக்கையுடைய பலரது கருத்தாகும்; எனவே இரவுப் பீடை தொலைந்து, மகிழ்ச்சிக்கு உரிய பகல் தொடங்கும் காலமாகிய தைத்திங்கள் தொடக்கம் என்னும் மகர சங்கிராந்தி, இரவுத் தொடக்கமாகிய கடக சங்கிராந்தியினும் மிகவும் சிறந்ததாயிற்று. இவ்வாறாகப் புராண நம்பிக்கையின்படி, தைத்திங்கள் தொடக்கமானது, 'சங்கிராந்தி' என்னும் பெயரில் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது எங்கே யாரால் கொண்டாடப்படினும், இவ்வளவு பொருத்த முடைய தைத்திங்கள் நாளைத் தமிழர் தமது திருநாளாகத் தேர்ந்தெடுத்திருப்பது, தமிழரின் நில இயல்-கணியியல்-வானவியல் அறிவின் திறனுக்குத் தக்க சான்றாகும்.

வடதுருவம்-தென்துருவம்:

நாம் இதுகாறும், புராணங்களை அடிப்படையாகக் கொண்டு வடசெலவு-தென்செலவு பற்றியும் தேவரின் பகலிரவு பற்றியும் பேசினோம். தேவரின் பகலிரவு கற்பனையெனினும், ஞாயிறின் வட செலவும் தென் செலவும் நாம் நேரில் பார்த்துவரும் காட்சியேயாகும். தேவரின் பகலிரவு என்பதுங்கூட முழுவதும் பொய்க் கற்பனையாகாது; அதிலும் ஒரு நடைமுறை உண்மை மறைந்திருக்கிறது. அந்த உண்மை, நில இயல்-வான இயல் ஆகியவை தொடர்பானது. அந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டே வட செலவு-தென் செலவு, தேவரின் பகலிரவு ஆகியவை விவரிக்கப் பட்டுள்ளன. இது தெரியாமலேயே பலர், உத்தரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/136&oldid=1323727" இலிருந்து மீள்விக்கப்பட்டது