பக்கம்:தைத் திங்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 தைத் திங்கள்


யணம்-தட்சணாயணம்-தேவர் பகலிரவு ஆகியவை பற்றிப் பேசிக்கொண்டுள்ளனர். இதன் விவரம் வருமாறு.

நாம் வாழும் பகுதியில், ஒரு நாள் என்பது. பகல் பன்னிரண்டு மணி நேரமும் இரவு பன்னிரண்டு மணி நேரமுமாகப் பெரும்பாலும் சரிபாதியாக இருக்கும். உலகின் எல்லாப்பகுதிகளிலும் இந்த நிலையைக் காண முடியாது. பகல் இரவு நேரங்களில் பற்பல மாறுதல்கள் இருக்கும். ஞாயிறு முற்பகல் பத்து மணிக்குத் தோன்றிப் பிற்பகல் இரண்டு மணிக்கு மறைந்துவிடும் இடங்களும் உள்ளன; அங்கே பகல் நான்கு மணி நேரமும் இரவு இருபது மணி நேரமுமாக ஒரு நாள் உள்ளது. வேறு சில இடங்களில் ஞாயிறு வைகறை நான்கு மணிக்கே தோன்றி இரவு எட்டு மணிக்கு மறையும்; அங்கே பகல் பதினாறு மணி நேரமும் இரவு எட்டு மணி நேரமும் ஆகும். இவ்வாறு இன்னும் பல்வேறிடங்களிலும் பலப் பல மாறுதல்கள் உண்டு,

இதனினும் வியப்பிற்கு உரிய செய்தி ஒன்றுள்ளது. நாம் வாழும் நில உருண்டையின் வடக்குப் பகுதி வடதுருவம் எனவும் தென் பகுதி தென் துருவம் எனவும் வழங்கப்படுவது அனைவரும் அறிந்ததே, இந்த இரு துருவப் பகுதிகளிலும் பகல் எத்தனை மணி நேரம்-இரவு எத்தனை மணி நேரம் என அறிந்தால் பெருவியப்பு உண்டாகும். இவ்விடங்களில் பகலும் இரவும் மணிக் கணக்கிலோ-நாள் கணக்கிலோ-வாரக் கணக்கிலோ இல்லாமல் மாதக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/137&oldid=1323728" இலிருந்து மீள்விக்கப்பட்டது