பக்கம்:தைத் திங்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 தைத் திங்கள்


தொடங்கிவிடுகிறது' என்பது ஒரு கொள்கை. இந்த இரு கொள்கைக்கும் இடைப்பட்டதாகக் தைத் திங்கள் தொடக்கம் இருக்கிறது. அஃதாவது.-மார்கழி ஏழாம் நாளுக்கும் தைத் திங்களில் வரும் இரத சப்தமி நாளுக்கும் இடையில் தைத் திங்கள் தொடக்கம் இருப்பது காண்க. நாளடைவில் காலக் கணக்கு வேறு படுவது இயற்கை.

ஏதோ நாள் கணக்கு சிறிது முன் பின்னாக இருப்பினும், தேவர் பகல் எனவும் வடதுருவப் பகல் எனவும் வட செலவு (உத்தராயணம்) எனவும் கூறப்படும் நன்னாளின் தொடக்கமாகத் தைத் திங்கள் தொடக்கம் இயற்கையாக அமைந்திருப்பது எண்ணத்தக்கது. பண்டைக் காலத்தில் தமிழர்கள் இவற்றையெல்லாம் நன்கறிந்தே, தைத் திங்கள் தொடக்க நாளைத் தமது சிறப்புத் திருநாளாகத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறின் மிகையாகாது.

தமிழ்ப் புத்தாண்டு:

இந்தக் காலத்தில் தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டுப் (புது வருடப்) பிறப்பாகச் சித்திரைத் திங்களின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. அந்த நாளைப் பட்டி தொட்டியெல்லாம் மக்கள் 'வருஷப் பிறப்பு வருஷப் பிறப்பு' என வழங்குகின்றனர். இஃது ஒரு கொள்கை. பழைய சேரநாடாகிய மலையாளத்தின் தென் பகுதியிலும், திருநெல்வேலியுள்ளிட்ட தென்பாண்டி நாட்டின் சில பகுதிகளிலும், ஆவணித் திங்களின் முதல் நாள் புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/141&oldid=1323787" இலிருந்து மீள்விக்கப்பட்டது