பக்கம்:தைத் திங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

23


சொல்லுக்குப் 'புனையப்படுதல்'எனப் பொருள் வரைந்துள்ள உரைப்பகுதியிலும், இன்ன பிறவற்றிலும் கண்டு மகிழலாம்.

தையின் இனிமை:

தை என்றாலே மக்களுக்கு இனிமைதான்-இன்பம் தான்! இந்தக் கருத்தைக் கலித்தொகைப் பாடல் ஒன்று நயம்பட நவின்றுள்ளது. இசை வல்ல கோவலர்கள் தனித்த சிறப்புடைய புல்லாங்குழல் இசைக்கிறார்களாம்; அந்தக் குழலிசை கேட்பதற்குத்

'தை' என இனிக்கிறதாம்; இதனை,

'தை எனக் கோவலர் தனிக்குழல் இசைகேட்டுப்
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்'


என்னும் (118-ஆம்) கலித்தொகைப் பாடல் பகுதியால் அறியலாம்.

தை விளையாட்டு:

தைப் பொங்கல் விழாவில் சிறாரும் இளைஞரும் ஏன் பெரியவருங்கூடப் பல்வேறு விளையாட்டுக்களில் பங்கு பெற்று மகிழ்வதுண்டு. இதனை இன்றும் சிற்றூர்களில் மிகுதியாகக் காணலாம். ஒப்பனை மிக்க இனிய 'தை' விளையாட்டுக் கலைக்கும் பெயர் பெற்றதாகும். 'தை' என்னும் சொல்லுக்கு விளையாட்டு என்னும் பொருளும் உண்டு. இந்தப் பொருளாட்சி,

'நிழல் காண் டோறும் நெடிய வைகி
மணல்காண் டோறும் வண்டல் தைஇ
வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/40&oldid=1323604" இலிருந்து மீள்விக்கப்பட்டது