பக்கம்:தைத் திங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 தைத் திங்கள்

நெருடிக் கயக்கிக் கன்னத்தில் அடக்கிக் குதப்பித் தின்றுகொண்டிருக்கிறதாம். இந்தக் காட்சி, தை நோன்பு கொண்டவர்கள் பொங்கல் உணவு செய்து உண்ணும் காட்சி போன்றிருக்கிறதாம். இதனை நற்றிணையில் 'கொடிச்சி காக்கும்' என்று தொடங்கும் (22- ஆம்) செய்யுளிலுள்ள,

"நோன்பியர் தை ஊண் இருக்கையின்
தோன்றும் நாடன்”

என்னும் பகுதியால் அறியலாம். இதற்கு உரையாசிரியர் வரைந்துள்ள உரைப்பகுதி வருமாறு:"நோன்புடையார் தைத் திங்கட் பிறப்பில் நீராடி நோன்பு முற்றியிருந்து உண்ணுதல் போலத் தோன்றா நிற்கும் மலை நாடன். தையூனிருக்கை-தைத் திங்கட் பிறப்பில் நீராடி அன்று ஆக்கப்படு மாட்சிமைப் பட்ட உணவு உண்ண இருத்தல்"-

மேலே காட்டிய நற்றிணைப் பாடல் பகுதியாலும் அதன் உரைப் பகுதியாலும், தைப் பொங்கல் உணவு விருந்து விழா ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடைபெற்றுவரும் சிறப்பினை நன்கறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/57&oldid=1323634" இலிருந்து மீள்விக்கப்பட்டது