பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

23

உங்கள் உறவுகள்
ஊமைக் காவியம்!
எங்கள் இதய
மெளனச் செருக்கு!
மெல்லிய நாக்கின்
‘மியாவ்மியாவ்’ அன்றி
சொல்லோ, பாஷையோ
வேறெதும் இல்லை!
பயந்திடும் போதும்
பசித்திடும் போதும்
நயமாய் ஒலிக்கும்
'மியாவ்! மியாவ்! தானே!

பேசப் பேசியே
பெற்ற வினாடிகளைத்
துசாய்; நஞ்சாய்
ஆக்கு கின்ற
மனித நாக்கின்
மோசடிகள் எல்லாம்,
இனித்திடும் ரோஜா
இதழ்களை அரைத்து
தட்டியே வைத்தது
போல இருக்கும்
குட்டி நாக்குகளில்
கொஞ்சமும் இல்லை!

தனக்குநிகர் யாரென
தருக்கிடும் மனிதனின்