பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வ. கோ. சண்முகம்பங்குனி!


கற்றடங்கிய ஞானமோ? - உள்
கனலடங்கிய மோனமோ?
விற்றடங்கியக் கடையதோ? - தன்
வினைமுடித்திடும் ‘பங்குனி’!

மடியடங்கியப் பசுவதோ? - கிழ
மாதவளின் கொசுவமோ?
நடைநிறுத்திய பயணமோ? - கடை
நாளடைந்திடும் ‘பங்குனி’!

கடலைடையும் நதியதோ? - விழாக்
கலைமுடிக்கும் அரங்கதோ?
உடல்விடுக்கும் உயிரதோ? - பனி
ஓய்ந்தடங்கும் ‘பங்குனி’!