பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வ. கோ. சண்முகம்


கோடை!

நெடியநினி பாதையில் நெருப்பின அலையாய்
அடிக்கும் காற்றில் கொடுக்கும் உண்டோ ?
சோர்ந்து களைத்த சொகுசு வீடுகள்!
சார்ந்த சந்துகள் வழியே சுழலும்
சூறையின் முதுகில் சருகுச் சுமைகள்!

ஏறும் கோடை
இதுவே! இதுவே!!

வறண்ட உதட்டைத் திறந்து காட்டி
இறுகிய பூமியும் செருமிக் கூவி
வேதனைத் தனிமையை விம்மிக் கரையுதோ? நீதிபோல் தழைத்த நெடுமரம், புல்செடி
கருகியும்; காய்ந்தும்; குனிந்து குமைந்தன!

பெருகிடும் கோடைப்
பருவம் இதுவே!!