பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

47


ரூபமாகவோ
பிஞ்சுக் சூரியனின்
மாணிக்கச் சிரிப்பாகவோ-
தனிமையிலும் தனிமை கொண்டு
சாகும்போதே
பிறந்துகொண்டிருக்கும்
பிறைவற்றலின்
மெலின சவாலாகவோ -
மிதந்து மிதந்து
அழகை ருசிக்கச் சொல்லியோ -
வாழ்வினர் இருண்ட ரகசிங்களைத்
தொட்டுப் பார்த்தோ
அன்புக்கட்டளை இட்டோ -
கிசுகிசுக்கிறாய்!
நன்றி!
நாள்தோறும் இதைச்செய்...!
செய்துகொண்டே இரு...!

எண்எண்ணங்கள்
வறுமையினர் சூறாவளியால்
பசுமையான வஞ்சங்களின்
நச்சு நெடியால்
தாக்குண்டு சோகையாகும்போது
சோடையாகும்போது -
அவைகளுக்கு
'சாஸ்திர வைத்தியம்’ செய்து