பக்கம்:தைப்பாவாய்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிக்கும் சூரியன் படுக்கும் வரையில், பாரத சுவாசம் பாரம் பரியத்தின் அழுத்தத் தோடே ஆவேசத் துடனே இயங்க வேண்டும்! இழைய வேண்டும்! தைப்பாவாய் கலையில்; தொழிலில் கலப்பையில் எல்லாம் எங்கும்; எதிலும் 'இந்திய ரத்தம்' உலவிட வேண்டும்! உயர்த்திட வேண்டும்! விதேச சரஸ ஆலிங்கன லீலைகளின் அட்ட வணைகளை மெல்ல மெல்ல வெட்டி எறிந்தே 'நாமே நமதில்' நிறைவது ஒன்றே உத்தம அழகுறும் உறுதியாம் சுதந்திரம்! 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/28&oldid=1499278" இலிருந்து மீள்விக்கப்பட்டது