பக்கம்:தொடுவானம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வண்டிக்காரன்


கானடா ஆதி

எடுப்பு

நேரத்தை வீணாக நீட்டாதே!மாடே!

நேரிழை வழிபார்க்கும் வீடோ நெடுந்தூரம் !

மேல் எடுப்பு

ஓரத்தில் நின்றென்னை ஓயாமல் பார்த்திருப்பாள்!

ஒவ்வொரு நாழியுமென் உரையில் திளைத் திருப்பாள்!

அமைதி

கல்கி விகடனிடம் கற்ற நடையிதுவோ?

 கல்லார் கவிதை பொருள் இல்லா நடையிதுவோ ?

 கல்ஆமை ஓட்டமோ காரெருமை நடையோ?

 மெல்ல நடக்கின் றாயே! வீடோ தொலைவிருக்கே !

கம்பன் நடைவேண்டாம்! சேக்கிழான் நடைவேண்டாம் !

 காஞ்சி கச்சியப்பத் தம்பிரான் நடைவேண்டாம் !

கொம்புத் தமிழ்த்தேன்மிகு சங்க நடைபோல

கொல்லேறு பாரதி தாசன் நடைபோடே !


8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/10&oldid=1343777" இலிருந்து மீள்விக்கப்பட்டது