பக்கம்:தொடுவானம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மறந்திட வேண்டாம்!



செஞ்சுருட்டி ரூபகம்

கலியாண மாகாத பெண்ணே சொல்வேன்
கருத்தோடு கேட்டு நடந்திடுவாயடி கண்ணே!

புலிநிகர் ஆளனைத் தேடு பெற்றோர்
புகுந்திடை வந்தால் ஒப்பாதே சாடு
மலிந்த சரக்கல்ல பெண்கள் நாட்டின்
வாழ்விற்கும் வளத்திற்கும் அவர்களே கண்கள்!

வீடும் வயலும் பொருளும் நெஞ்சில்
மூளும் உணர்வினை மாற்றுமோ நாளும்
கோடி இருந்தாலும் காதல் இல்லாக்
குடி செய்வதால் வந்து தீருமே நோதல்!

உன்நிலை உன்னுதல் நீயே! செற்றோர்
உறவினர் அல்லடி எதிர்காலத் தாயே!
அன்னையின் காதல் விளைவே நாட்டின்
அரணாகும் திருவாகும் மறந்திட வேண்டாம்!


40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/42&oldid=1342938" இலிருந்து மீள்விக்கப்பட்டது