பக்கம்:தொடுவானம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புறப்படு!



பெரெளி ஆதி

எடுப்பு

பொழுது புலர்ந்தது! பொற்கதிர் தோன்றிற்று!
புலிநிகர் திராவிடத் தோழனே ! புறப்படு!

மேல் எடுப்பு

தொழுது வணங்கிய இருட்காலம் தொலைந்தது!
தோளைக் குலுக்கிப் பகை வீழ்ந்திடும் வாளேந்தி

அமைதி

ஆண்டு களித்த இனம் அடிமையில் வாழ்வதோ ?
அண்டிப் பிழைக்க வந்தோர் அரசாள விடுவதோ ?
ஈண்டுள்ள யாவையும் திராவிடத் தோழனே!
எல்லோர்க்கும் பொதுவாக்கி நல்வாழ்வு வாழ்வோம் நாம்!


47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/49&oldid=1323640" இலிருந்து மீள்விக்கப்பட்டது