பக்கம்:தொடுவானம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கனவல்ல! இந்தோளம் ஆதி

          எடுப்பு

வாளினை எடுப்பீர்! - போர் வாளினை எடுப்பீர்!

        மேல் எடுப்பு  காளைகளே அஞ்சேல் காண்போம் திராவிடத்தை!
        அமைதி

பண்டு திராவிடர் வடவரின் கீழே பணிந்து கிடந்த துண்டோ? பகருவீர் நீரே சண்டைப் புலி யொத்தீர் ஏனோ இன்னும் தயக்கம்? சமைப்போம் திராவிடத்தை - இமைபோலதனைக் காப்போம். கடல் பிறக் கோட்டினான் திராவிடன் அன்றோ! கஞ்சிக்கு வழியற்றான் திராவிடன் இன்றோ! வடமலை திரித்தனன் திராவிடன் அன்றோ! வாய்பொத்தி வாழ்கிறான் திராவிடன் இன்றோ! உடைமை பொதுச்செய்து திராவிட நாட்டை உருவாக்கத் தூளாகும் பணக்கார மூட்டை! கடமை மறவாதீர் திராவிட நாட்டீர்! கனவல்ல அடைவோம் நாம்! இனம் ஒன்றாய்ச் சேரீர்!

           46
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/48&oldid=1322934" இலிருந்து மீள்விக்கப்பட்டது