பக்கம்:தொடுவானம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஊதாயோ? காப்பி ஆதி

         எடுப்பு

விழித்தெழ ஊதாயோ? - சங்கே! விழித் தெழ ஊதாயோ-?

       மேல் எடுப்பு

கொழுத்த முதலாளி கொடுமையால் நாடோறும் கழுத்து நசுங்குண்டு கதறிடும் தொழிலாளி

       அமைதி

காட்டைத் திருத்திக் கழனி வளைத்துக் கடுமழை குளிரினால் மேனி இளைத்து வாட்டும் பசிநோய் மாளநெல் விளைத்து வழங்கி நலிந்துபின் புழுங்கும் உழவனிங்கு - வான்தவம் மாடமும் கூடமும் கட்டி வரப்போக மலைகாட்டுப் பாட்டைகள் வெட்டி கூனரிவாள் வேல் மண் பானை சட்டி கொடுக்கும் தொழிலாளி வாழ்வதோ வயிறொட்டி - வளமாக்க உழைத்திட்ட தொழிலாளிக் கீடு வழங்கிற்று வறுமையும் தாழ்மையும் காடு! உளம் உடல் துடிக்குதே அவர்படும் பாடு! உறங்கும் புலிவிழித்தால் நரிகளுக்கே கேடு!

          52
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/54&oldid=1325415" இலிருந்து மீள்விக்கப்பட்டது