பக்கம்:தொடுவானம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழகல்லவே! கர்நாடக தேவகாந்தாரி ஆத்

          எடுப்பு

எப்படிப் பாடினரோ அடியார் அப்படிப் பாடுதல் அழகல்லவே - புலவா !

       மேல் எடுப்பு 

கப்பும் குளிர்மழையில் கையினால் மெய்போர்த்துக் கஞ்சி யில்லாது வாடும் பஞ்சைகளைப் பாடாது_

         அமைதி 

குப்பனும் சுப்பனும் குந்தக் குடிசையின்றி இப்பெரும் மண்ணுலகில் என்றும் உழைத்து வாடத் தொப்பை தடவி உண்ட சோறு செரிக்க நாளும் உப்பைக் குடிக்கும் செல்வர் ஊர் எய்த்தல் பாடாது ஏற்றமும் தாழ்வும் எம்மான் செயலே என்று போற்றிடும் ஏழைமன மாற்றம் அடைந்திட ஆற்றை மடக்கி வயல் சேற்றை விளைத்தவர். சோற்றைத் திருடும் செல்வர் கூற்றை விளைக்கிடாது_ காட்டையழித்து மலைப்பாட்டைச் சமைத்தவர் வீட்டைஉருவாக்கிக் கோட்டை விளைத்தவர் பாட்டை விளைக்கிட கேட்டைத் தவிர்த்திட நாட்டினில் உன்தமிழ்ப்பாட்டினைப் பாடாமல்_

             53
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/55&oldid=1325391" இலிருந்து மீள்விக்கப்பட்டது