பக்கம்:தொடுவானம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 விருப்பங்கொள்வாய்! தர்பார் சாபு

          எடுப்பு

விண்ணாசை மறந்து பெண்ணாசையுடன் வாழ விருப்பங் கொள்வாய் மனமே! - அனுதினமே.

       மேல் எடுப்பு

உண்ணக் கொடுத்து நாளும் ஊக்குவதும் பெண்மையே! உயிருடல் ஈந்தவள் நம்மரும் அன்னையே!

         அமைதி

பாவிகள் பெண்களைப் பழித்தனர் தூற்றினர் பற்றுக் கொண்டால் நாசம் உற்றிடும் என்றனர் ஆவதும் பெண்மையால் அழிவதும் பெண்மையால் அறிவைப் பெருக்கிப் பெண்கள் இழிவினை நீக்கிட

            54
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/56&oldid=1325396" இலிருந்து மீள்விக்கப்பட்டது