பக்கம்:தொடுவானம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் பாடடா!


கமாஸ் ஆதி

எடுப்பு

அறிவூட்டத் தமிழ் பாடடா - மக்கள்
அறியாமை தனை ஓட்டடா !

மேல் எடுப்பு

நெறிவிட்டு நெறிமாறினார் - தமிழர்
நிலைகெட்டு மனம் மாறினார்.

அமைதி

காட்டைத் திருத்தி வயல் கழனியைக் கண்டவர்
கஞ்சிக்கு வழியற்றுப் பஞ்சையாய் வாழ்வதோ ?
கோட்டையைத் தந்தவர் வீட்டுக்கு வழியற்றுக்
குட்டிச் சுவர் அருகில் குடித்தனம் செய்வதோ ?

தாழ்வும் உயர்வு மின்றிச் சரியாக வாழ்ந்தவர்
சாதி சமய மேற்றுத் தடந்தோளை இழந்தனர் ;
கூழைச் சிலர் ஒளிக்கும் கொடுமை ஒழிந்திட
குள்ள நரிக் கூட்டம் இல்லா தழிந்திட

வாழ்வாங்கு வாழ்ந்தவர் வடமலை திரித்தவர்
மறைவில் தமிழ்இகழ மணிமுடி நெறித்தவர்
கோழைக ளாகினர் கொடுமைக ளேற்றனர்
குன்றைப் பிளக்கும் தோளை இன்றே உருவாக்கும்.

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/57&oldid=1337780" இலிருந்து மீள்விக்கப்பட்டது