பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தொட்டனைத்துறும் மணற்கேணி பின்பு பத்து ஆண்டுகள் கழித்துக் கிரேக்க வரலாற்றைப் படித்த போது நான் கண்டுபிடிச்சேன். இந்த மார்க்கஸ் அரேலியஸ் போல அயோக்கியப் பயல் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. சண்டாளன் என்றால் அப்படி ஒரு சண்டாளனைப் பார்க்க முடியாது. ஆனால், அது என்ன ஆச்சரியம். அவனுக்குள் இரண்டு பேர் இருந்திருக்கணும். - D. Jekyil and Mr. Hyde மாதி அவனுக்குள். இருந்த Dr. Jekyll தான் இந்த Meditations எழுதியிருக்கணும். இதைத் தெரிந்த பிறகு அந்தப் புத்தகத்தைக் கையிலே தொடக்கூடப் பிடிக்கிறதில்லே. - அதற்கு முன்னாலே நானே விரிவுரை பண்ணுவேன். இந்த மாதிரி தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு கிடையாதுன்னு - ரொம்ப வருந்தத் தகுந்தது என்று. 17 வருஷம் இலக்கிய வரலாறு நான்தான் பாடம் சொன்னேன். M.A.க்குப் பத்து வருஷம் இதைத் தான் சொல்லியிருக்கேன். பிறகு தவறு என்று உணர்ந்து, மாற்றிக் கொண்டேன். தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு இருந்தது. அதை அவர்கள் வெளிக்காட்ட விரும்ப வில்லை. - அரசன் அரசியர் கதை வரலாறு அன்று மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்? என்ன உண்டார்கள்? என்ன நினைத்தார்கள் என்பதைப் பிற்பாடு Carlyle படிக்க ஆரம்பித்தேன். கார்லைல் சொன்னான். சொல்லுடா! அதுதாண்டா வரலாறு என்றான் தாமஸ் கார்லைல்.