பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 89 'சைவர்கள் விட்டுவிடுவார்களா ஆகா எண் குணத்தன்' என்றதனாலே எங்கள் சிவபெருமானைத் தான் சொல்லியிருக்கான் என்றார்கள். பாவம் - வைஷ்ணவன் ஒருத்தன்தான் எண் குணத்தன் என்றதானாலே ஒன்றும் சொல்லிக்கொள்ள முடியலே. அவன் பார்த்தான். 'அடி அளந்தான் என்றதனாலே எங்கள் வைஷ்ணவத்தைத்தான் சொல்லியிருக்கு, தாமரைக் கண்ணான் உலகு என்று வைகுண்டத்தைத்தான் சொல்லியிருக்கு. அப்படி எல்லாரும் தனது தனது என்று உரிமை கொண்டாடுகிற மாதிரி அவன் தன்னை மறைத்துக் கிட்டான். இளங்கோவடிகள் மாதிரிதான் மறைத்துக் கிட்டிருக்கிறார். ஏன் அந்த மாதிரி மறைத்துக்கிட்டிருக் கிறார்? மனிதர்களுக்குள்ள மன வேறுபாடு - கோட்டங் களை நன்றாக அறிந்தவன். அவன் இன்னான் என்று தெரிந்தால் உண்மையாகவே திருக்குறள் இப்படிப் பரவி இருக்காது. அது உண்மை. நான் சின்ன பையனா இருக்கும்போது மார்க்கஸ் அரேலியஸ் எழுதிய கிரேக்க வரலாறு எல்லாம் படிக்காத போது - மார்க்கஸ் அரேலியஸ் சிந்தனைகள் என்று ராஜாஜி மொழி பெயர்ப்பு பண்ணியிருந்தார். அதைத் தற்செயலாகப் பார்த்தேன். நம்பமாட்டீங்க. 'குட்டித் திருவாசகம் அது. அதைப் பாராயணமே பண்ணுவேன் நான்.