பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தொட்டனைத்துறும் மணற்கேணி திருவள்ளுவருக்கு முன்னால் இருந்த அகநானூறு, புறநானூறு பாட்டுகளைப் படித்தீர்களானால், அது வந்து பண்டிதர் தமிழ் மாதிரி இருக்கு. உடனே எளிதில் புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம். திருவள்ளுவருக்குப் பின்னாலே வந்தவர்கள் பாடியதையும் புரிந்துகொள்ள உதவி தேவையாக இருக்கு. திருவள்ளுவர் இரண் டாயிரம் வருடத்துக்கு முன்னாலே பாடினார். குறள் பெரும்பாலும் இக்கால மொழிநடையாக இருக்கே, அது எப்படி? பதில்: இரண்டு வகை. ஒன்று - தான் சொல்ல வந்தது. தன் புலமையை அல்லது கற்பனையைக் காட்ட வேண்டும் என்கிற போது அது மாறுபடும். தன்னைப் பற்றியே மறந்து இது மற்றவர்களுக்காக எழுதப்படுவது என்கிற போது மாறுபடும். அவ்வளவுதான். வள்ளுவன் தன்னை எந்த இடத்திலும் வெளிக் காட்டிக்கவே இல்லை. அவன் ஆம்பளையா? பொம் பளையா, பாணனா, பார்ப்பானா - மயிலாப்பூரிலே பொறந்தானா - அமெரிக்காவிலே பொறந்தானா - ஒன்றும் தெரியலை. என்ன சாமியக் கும்பிட்டாங்கறது கூடத் தெரியாது, கடவுள் நம்பிக்கை உண்டு. என்கிறதைத் தவிர. எண் குணத்தான் என்றதனாலே ஜைனன் எங்களுக்குத்தான் சொல்லியிருக்கான் என்றான். பெளத்தன் எங்களுக்குத் தான் சொல்லியிருக்கான் என்றான். .