பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 87 வெளியில் நிற்கிறானா? அப்போ சிவபெருமான் இவங்க இரண்டு பேரையும் படைக்கலேன்னா, சாத்தான் கதையாக அல்லவா ஆகிப்போச்சு! பின்னே ஏன் பாடினாங்க? சிலவற்றைச் சொல்ல வேண்டிய காலம் - சூழ்நிலை அவ்வளவுதான். அதனை அவர்கள் நன்றாக அறிவார்கள். எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்அடியார்க்கு இங்கேஎன்று அருள்புரியும் எம்பெருமான் (திருமு:2:40:6) என்று பாடிய ஞானசம்பந்தர் புத்தனுக்கு மோட்சம் இல்லேன்னு எப்படிப் பாடுவார்? ஜெயினனுக்கு மோட்சம் இல்லேன்னு எப்படிச் சொல்லுவார். விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்தே எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும் . (திருமு:4:60:9) என்று அவங்களும்தான் பாடுகிறார்கள். 'நீ என்ன சொன்னாலும் எங்க சாமி ஏத்துக்குவாங்கன்னு சொல் லிட்டு, அடுத்த பாட்டிலே, நீ சைவனாக இருக்க வேண்டும் என்றும் பாடுவார்கள். அது அந்தக் காலத்தைப் பொறுத்தது - அவ்வளவு தான். - - கேள்வி: திருவள்ளுவர் காலத்தைப் பற்றியும், அவருடைய மொழிநடையைப் பற்றியும் ஒரு கேள்வி.