பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தொட்டனைத்துறும் மணற்கேணி என்று பாடியிருக்கே. சிவன் எல்லா நாட்டிற்கும் பொதுவா? பதில்: ஆமாம். அந்த காலத்தில் ரொம்பப் பரந்த நோக்க முடையவர்களாக இருந்திருக்காங்க. நால்வர்கள் காலம் மட்டுமல்ல. ஆழ்வார்கள் காலம் மட்டுமல்ல. அவங்க அவங்க காலத்திலே சிலவற்றை அழுத்திப்பாடுவாங்க. இல்லை என்று சொல்வதற் கில்லை. சைவம்தான் உயர்ந்தது என்று பாடுவாங்க - வைஷ்ணவம்தான் உயர்ந்தது என்று பாடுவாங்க. தப்பு ஒன்றுமில்லே. ஆனால், ஆழ்ந்த தத்துவம் என்று வருகிற போது ஈறாய்முதல் ஒன்றாய் இரு பெண்ணாண் குணம் மூன்றாய் மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய் ஆறார் சுவை ஏழோசையொடு எட்டுத் திசை தானாய் வேறாய் உடனானானிடம் விழிம் மிழலையே (திருமு:1:11:2) என்று முடித்து விட்டார் சம்பந்தர். வெளியே வேறாக இருக்கிறார்; உள்ளே உடனாயும் இருக்கிறார்: "வேறாய் உடன் ஆனான்' - இறைவன் உள்ளேயும் இருக்கிறார். வேறாகவும் இருக்கிறார். அவ்வளவு பரந்த நோக்கம் சொல்லும் போது அப்புறம் பெளத்தன் எங்கே சார் வந்தான்? எல்லாம் ஆண்டவனாக இருக்கும்போது, பெளத்தன் மட்டும் அந்த ஆண்டவனுக்கு அப்பாலே எல்லைக் கோட்டுக்கு வெளியிலே நிற்கிறானா? சமணன்