பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 85 அது மெய்ப்பொருள். அதைக் குறுக்கிக் குறுக்கிச் சைவமாக்கி ஆறுமுக நாவலர் செய்த மாதிரி கொடுமை வேறு யாரும் செய்யலை - சைவத்தைப் பற்றிப் பால பாடம் - வினா விடை’ என்று புத்தகம் எழுதினார். அதிலே - கோபுரம் தெரியாத இடத்திலே நீ போனால் நரகத்துக்குப் போவே என்று எழுதிவிட்டார். அதற்கு மேலும் கொடுமை - அந்தக் காலத்தில் எல்லாரும் விபூதிப் பை ஒண்ணு வைத்திருப்பாங்க. அது எப்படி யிருக்கணும்னு சொல்றார். 'விபூதிப் பை இரண்டு விரல் அகலம், ஒரு விரல் நீளத்திற்குமேல் பை இருந்தாப் போச்சு இப்படித் தான் இடனும் திருநீறை; இப்படி இல்லேன்னா எரிவாய் நரகம் புகுவாய் என்று எழுதினார். நான் சொன் னேன். 'சொன்ன இவர்தான் நரகத்துக்குப் போவார் என்று . மெய்ப்பொருளா இது! இதைப் படித்து விட்டு, இதன்படியே நடக்கிறவங்க இருக்காங்க, யாழ்ப்பாணத்திலே - இன்று யார்யார்வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள் பார்க்கிறோம். ஆறுமுக நாவலர் ஒரு பெரிய சைவர். யாரும் மறுக்க முடியாது. ஆனாலும் அதை நான் ஏற்றுக்கத் தயாராக இல்லை. அது மெய்ப் பொருளல்ல. - கேள்வி: திருவாசகத்திலே, 'தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி (திருவாச. 4, 164-165)