பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தொட்டனைத்துறும் மணற்கேணி போய்விடுவாங்க எனச் சொல்கிற அந்தக் குழு இல்லே இவர்கள். பரந்த மனமுடையவர்கள். அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் (பெ.பு. தடுத்தாட்கொண்ட) என ஒர் அடி. அப்பாலும் என்றால் கால தேச வர்த்தமானம் எல்லாம் கடந்த நிலை. முற் காலத்திலே இருந்தவங்க, நம்ம காலத்திலே இருக்கிறவங்க - இன்னும் பிற்காலத் திலே வருகிறவங்க. இந்த இந்தியாவிலே இருந்தவன், அமெரிக்காவில் இருந்தவன்... எங்கிருந்தாலும் அப்பாலும் - காலம், இடம், வர்த்தமானம் மூன்றையும் சேர்த்தது அப்பாலும் அடிச் சார்ந்த என்ற தொடர். இறைவன் என்று நினைத்து எவர் உருகினாலும் அவங்க அத்தனை பேருக்கும் தான் அடியார்’ என்று பெயர் சொல்கிறார். சைவர்களுக்கு மட்டுமல்ல. அவ்வளவு விரிந்த மனம்! . எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்கு இங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் (திருமு:2:40:6) - ஞான சம்பந்தர் தேவாரம். எங்கேனும், யாதாகிப் பிறந்திடினும் நீ நாயா பிற கழுதையாகப் பிற மானிடனாய்ப் பிற கவலையில்லே. வினைப் பயனால், எங்கேனும் யாதாகப் பிறந்திடினும், தன்னடியார் ஆக இருந்தால் அவங்க அத்தனை பேருக்கும் அருள் செய் கிறான் எம்பெருமான். அத்தனை தாராள மனத்தோடு இருந்திருக்கிறார்கள். -