பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தொட்டனைத்துறும் மணற்கேணி பண்ணினா எனக்கென்ன? என் பெண்ணையா கொடுக்கப் போறேன். பள்ளியில் சொல்லிக் கொடுப்பது எல்லாம் குப்பை; வரலாறு அன்று எனச் சொல்வான், கார்லைல். இது தெரிந்த பிற்பாடு நான் மாறினேன். ஏன் வள்ளுவன் தன்னைக் காட்டிக்கலே? அவனுக்கு மக்களைத் தெரியும் - அவன் இன்னாரு என்று தெரிந்தால் - நீங்க உரிமை கொண்டாடுவீங்க. அவர் உடுமலைப் பேட்டைக்குப் பக்கத்திலே தான் பிறந்தாரு என்பார் ஒருவர். நான் இல்லவே இல்லை மயிலாப்பூரிலே’ என்பேன். இந்த விவகாரமெல்லாம் வரும். . பராசரன்... அட்டர்னி ஜெனரல்... அவர் தந்தை கேசவய்யங்கார். - அவரு வடகலை ஐயங்கார் திருவள்ளுவர் என்று சொல்லியிருக்கிறார். நீங்கள் நம்புவீர்களா? வள்ளுவர் உள்ளம் என்று 450 பக்கம் எழுதியிருக்கிறார் ஒரு புத்தகம், - இது மனித இயற்கை. வள்ளுவன் பார்த்தான். நூலை வெளியிட்டான்; ஆளை மறைச்சுக்கிட்டுப் போயிட்டான். கேள்வி: வள்ளுவரை விடுங்க. யானைக்கே வடகலை நாமமா, தென்கலை நாமமா... என்று சுப்ரீம் கோர்ட் வரை போனாங்க. -