பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 93 பதில்: போனோம் அதுக்கப்புறம் தமிழர் பெருமை உங்களுக்குத் தெரியாது. நான் காஞ்சிபுரத்திலே பணியாற்றினேன். இரண்டு பேருமே போட்டாங்க. ஏன்னா? தென்கலைன்னு தீர்ப்பு கொடுத்துட்டான். தென்கலை நாமத்தைப் போட்டான். பார்த்தான் வடகலையான். நீங்கள் நம்ப மாட்டீர்கள்; ஆனால் உண்மை. யானைக்குப் பின்பக்கத்திலே வடகலை நாமத்தைப் போட்டான். வெட்கமா இல்லே!? பகவா னுடையது என்று சொல்கிறதை யானையினுடைய ப்ரஷ்ட பாகத்திலே போட்டு... ஏன் இந்த ஊர் இருக்கே இராமானுஜர் - எதீந்திரர் கிட்டேப் படிச்சாரு. யாதவப் பிரகாசர் என்பவர் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்லே உட்கார்ந்து, பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்திருந்தார். 'கப்யாஸம் புண்டரீகம் ஏவம்கூவினி' என்ற வாக்கியம் வந்தது. குரங்கினுடைய பின்பகுதி என்று அர்த்தம் பண்ணினாரு. முசு என்றால் குரங்கு. அதிலே ஒண்ணும் தப்பில்லே. பகவானுடைய வாய் சிவப்பாக இருக்கிறது என்கிற இடத்திலே முசுப்பிரஷ்டம் என்று வந்திருக்கு. 'செங்குரங்கினுடைய பின்பாகம் இருக்கிறதே, அது மாதிரி என அர்த்தம் பண்ணுகிறது இராமானுஜருக்குப் பிடிக்கலே. அவருக்குத் தாங்க முடியல. இராமானுசர், 'சூரியனால் மலர்ந்த தாமரை போன்ற கண்ணை உடையவன் பெருமான்' என்று பொருள் கொண்டார்.