பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தொட்டனைத்துறும் மணற்கேணி அதனால் யாதவப் பிரகாசரிடம் படிப்பது நின்றது. அப்போது கேள்விப்பட்டார் திருக்கச்சி நம்பி; படிப்பே இல்லாதவர் - பகவான் இராமகிருஷ்ணர் மாதிரி. கோவில்ல தண்ணி எடுத்துப் பூக்கட்டி கொடுக்கறது. கோயில்லேயே படுத்துக்கிறது. எல்லாரும் சொல்ற்ாங்க தினமும் பெருமாள் அவர் கிட்ட பேசறாரு என்று. நல்ல வேத அத்தியாயி. அறிவாளி. இராமானுஜர். படித்தவர். நம்பமுடியவில்லை. நம்பியோ சாதியும் இல்லாத ஆளு; தாழ்ந்த குலத்தவர். இவரைச் சோதனை பண்ணனும்னு 12 கேள்வி தயார் பண்ணினார், உடை யவர் - இராமானுஜர். இதை அவர்கிட்ட கொடுத்துப் பார்ப்போம். பகவான் கிட்ட கேட்டுச் சொல்றானான்னு. அடுத்து ஒரு சந்தேகம் வந்து விட்டது. இந்தக் கேள்வியை அவர் படிக்கிறதாவது? அவர்தான் படிக்காதவராயிற்றே. சந்தேகம் வந்தது. பார்க்கிற போதெல்லாம் கும்பிடுவாரு. 'நல்லா இருக்கியா குழந்தை'ன்னு ஆசீர்வாதம் பண்ணிப் போவாரு. ஒரு நாள் திருக்கச்சி நம்பி குளத்திலே தண்ணி எடுத்துக்கிட்டுப் போறப்போ இராமானுஜரை 'இங்கே வா' என்றார். - 'ராத்திரி பெருமாள் சொன்னாரு. என்னவோ 12 கேள்வி உன் கிட்டச் சொல்லச் சொன்னாரு என்று ஒப்பிச்சார் எனக்குத் தெரியாது. அது எல்லாம் இராமானுஜ ருடைய 12 கேள்விக்குப் பதில். அன்றையிலிருந்து திருக்கச்சி நம்பியை இராமானுஜர் குருவாக ஏற்றுக் கொண்டார்.