பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 95 இராமனுஜருக்குப் பெரிய இடத்துக் கல்யாணம் - அழகான பெண்டாட்டி - ஒருநாள் இராமானுஜர் திருக்கச்சி நம்பியைக் கூப்பிட்டு விருந்து போடணும்னு ஏற்பாடு பண்ண, நம்பி வேண்டாம்னு சொல்லிப் பார்த்தார். ஆனால் இராமானுஜர் கண்டிப்பா வரணும் என்றதால் சரியென்றார். பெண்டாட்டி கிட்டே 'பெருமாளே வரார் என்று சொன்னார். பெண்டாட்டி கொஞ்சம் முகத்தைச் சுளிச்சார். இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பாடு தயாராயிடுச்சு. அந்த வேளையில் இராமானுஜர் எங்கேயோ வேலையில் வெளியே போக வேண்டியிருந்தது. பகவனானுடைய செயல் - திருக்கச்சி நம்பி வந்தார். இராமானுஜருடைய பெண்டாட்டி ஒ, செட்டி இங்கே உட்கார்’ என்று திண்ணையில் வைத்துச் சாப்பாடு இலையிலே போட்டாள். அவர் சாப்பிட்டார். 'எலையை எடு' என்றாள். எடுத்துப் போட்டார். அந்தப் பெண்டாட்டி சோறையெல்லாம் போட்டுவிட்டுக் குளித்தார். அந்த வேளையில் இராமானுஜர் திரும்பி வந்தார். நம்பி வந்தாரா என்று கேட்டார். 'சூத்திரன் வந்தான் சாப்பாடு போட்டேன்' என்றாள். அப்பதான் இராமானுஜர் சன்யாசம் ஏற்றுக் கொண்டார். சூத்திர னுக்குச் சாப்பாடு போட்டேன். இது அந்த இராமானுஜர் மனைவியைப் பொறுத்த வரை அன்றைய சமுதாயப் பார்வை. யார் மறுக்கமுடியும்? - இவரைப் பொறுத்த மட்டில் இவர் பார்க்கிற பார்வை வேறு. அந்தப் பெண்ணைப் பொறுத்தமட்டில் பார்க்கிற பார்வை வேறு. சமுதாயப் பார்வை வேறு. ஆக மெய்ப்பொருள் எது? திருக்கச்சி நம்பி பகவானோடு