பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை எங்கள் தந்தையார் பேராசிரியர் அ.ச.ஞா. அவர்கள் 1992ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தார்கள். அங்கு 1992ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நியூஜெர்ஸியில் நிகழ்த்திய சொற்பொழிவின் பதிவு நாடா எங்களிடம் இருந்தது. எங்கள் தந்தையார் காலத்திலேயே இப்பதிவு நாடாவைக் கேட்ட திரு. இறையன்பு 1.A.S அவர்கள் அதனை நூலாக வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். என்ன காரணத்தினாலேயோ எங்கள் தந்தையார் இருக்கும் பொழுது அது நிகழவில்லை. இப்பொழுது அதனை வெளியிடுகிறோம். இந்த நூல் வித்தியாசமான அமைப்புக் கொண்டது. அவர்கள் எவ்வாறு பேசினார்களோ அவ்வாறே அச்சிடப் பட்டுள்ளது. தமிழினும் ஆங்கிலப் பயிற்சி மிக்குடைய அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்களிடையே நிகழ்த்திய சொற்பொழிவாதலின் அங்கங்கே ஆங்கிலச் சொற்களும் தொடர்களும் நிறைந்திருந்தன. அவற்றில் அவசியமான வற்றைத் தவிரச் சிலவற்றைத் தமிழ்ப் படுத்தியுள்ளோம். தொடர்பு கருதி அங்கங்கே ஒரு சில சொற்கள் விடப் பட்டும் சேர்க்கப்பட்டும் உள்ளன. மற்றபடி அவர்கள்