பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 99 இது காப்பியமே இல்லைடா என்னாங்க. உதிரிப்பாடல்க ளெல்லாம் சேர்த்திட்டாங்க, அவர் கதை இவர் கதை என்று. புறநானூறு மாதிரி. ஒரு தொகுப்பு. யாரோ ஒருத்தரை தலைவராக வைக்கமுடியலை. சேக்கிழாரே பார்த்தார். முதல்லே ஒரு கதையை வைத்துப் பின்னாலே ஒண்ணு - சுந்தர மூர்த்தி நாயனாரை காப்பிய நாயகனை வைத்துச் சொல்லலாம். Homerஇலும் Milton Paradise Lost@@jub ou 5th | PairGaðrirë(5 o $@ (flash back) மாதிரி பண்ணலாம். கேள்வி: கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே தந்தைசொல் மிக்க மந்திரமில்லை. என்றே வந்துகொண் டிருக்கிறது. ஆனால், பிரஹலாதன் கதையை எடுத்தால், தந்தை சொல்லை தட்டித் தூணிலும் இருப்பான் என்று சொன்னதால் தான் அவன் மோட்சம் பெற்றான். - இராமன் கதையை எடுத்தால், அரசாள வேண்டும் என்னும் கடமையை விட்டு விட்டுக் காட்டுக்குப் போனதால் இராமாயணம் வந்தது. இதுமாதிரி பார்த்துக்கொண்டு போகும்போது நம் முன்னோர்கள் கடமையைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து, எதை வற்புறுத்திச் சொன்னார்கள் என்று சொல்லலாம்....? பதில்: கடமை என்பது யாருக்கு? எந்த படிநிலை என்று இருக்கு. பள்ளிக்கூடத்திலே படிக்கிறபோது, படிக்கிறது தான் அவன் கடமை. அரசியலில் போயி... ஆனால் பெரும்பாலும் அதிலேதான் ஈடுபட்டிருக் கிறான். அது வேறு விஷயம்.