பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தொட்டனைத்துறும் மணற்கேணி கதை' என்று பாடினான். இது காப்பியமாக ஏற்றுக் கொண்டாங்க. தொண்டர் புராணம் என்றபோது, தொண்டுதான் தலைவன் என்று ஏன் ஏற்றுக் கொள்ள வில்லை. பதில்: அது எல்லாம் சரி சார். காப்பியம்னா காப்பிய நாயகன் என்று ஒருத்தன் இருக்கணும்னு - தண்டியலங் காரத்திலே காப்பிய இலக்கணம் வகுத்தான். - 'தன்னேரில்லாத் தலைவனை உடைத்தாய் எப்போ உடைக்க. ஆரம்பிச்சன்னா அண்ணைக்கே close. தமிழ்நாட்டிலே ஒரு காப்பியம் மாதிரி மற்றொன்று இல்லை. சிலப்பதிகாரத்துக்குப் பின்னே வந்தது எல்லாம் வேறே வேறே அப்புறம் வந்தது மணிமேகலை. சிலப்பதிகாரத்துக்கும் மணிமேகலைக்கும் எவ்வளவு வித்தியாசம். அதுக்கப்புறம் வந்தது. தலையும் இல் லாமல் வாலும் இல்லாமல் வெட்டி வைச்ச மாதிரி - பெருங்கதை - இதைப் பற்றி ஒண்ணும் தெரியாது. அதுக்குப் பின்னாலே வந்தது கம்பன்- அதைப் பற்றியும் ஒண்ணும் தெரியாது. சிந்தாமணி - ஒண்ணு மாதிரி ஒண்ணு கிடையாது. எதை வைச்சு, இலக்கணம் பண்றது? அதுதான் உபத்திரவம். எல்லாத்துக்கும் at... ஒரு common factor - சிலப்பதிகாரம்னு - கோவலன்னு ஒருத்தன் இருந்தான். மணிமேகலைன்னா, மணிமேகலை ஒருத்தி, பெருங்கதைன்னா உதயணன், இராமாயணம்னா இராமன் இப்படி 63 பேரில் யாரைப் போய்த் தலைவன் என்று எடுத்துக்கொள்வது? இந்தச் சிக்கல் வந்தவுடனே