பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 97 பதில்: அக்கால நிலையை ஏற்றார்; சில விதி விலக்கும் இருந்தது. சுந்தரமூர்த்தி நாயனார் குருக்கள் குலத்தில் பிறந்தவர். உலகத்தில் பொம்பளையே யில்லேன்னு ஒரு தாசியைக் கல்யாணம் செய்து கொள்ளணுமா? அதைப் பாடறார். மற்றவன்னா அதை மறைப்பான். ஆனால் சேக்கிழார் அப்படியில்லை. அவர் சிறப்பென்ன என்றால் ‘பதியிலார் குலத்துள் தோன்றிப் பரவையார் என்னும் நாமம் விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற. (பெ.பு.தடுத்தாட்கொண்ட 132) என்று பாடுகிறார். அன்று இதை நம்பறவங்களும் இருந்தாங்க. சிலர் இதைச் 'சீப்போ என்று இடது காலால் உதைத் தெறிந்தவர்களும் இருந்தார்கள். இல்லேன்னா, மயிலாப்பூரிலே வாழ்ந்த செட்டியார் சீர்காழியில் வளர்ந்த பிராமணனுக்குப் பெண்ணைக் கொடுக்கணும் என்று வளர்த்தான் - அவன் பைத்தியக் காரனா என்ன? இதைத் தூக்கி எறிந்த சிலரும் இருந்தாங்க. பெரும் பாலோர் எடுத்துக் கொண்டாங்க எல்லோரும் இராமானுஜர் அல்லர். - . கேள்வி: திருத்தொண்டர் புராணம் என்று பெயர் கொடுத்தார் சேக்கிழார். இதைக் காப்பியம் என்று எடுத்துக் கொள்ள ஏன் இவ்வளவு நாளாயிற்று இப்ப கம்பன் வந்து ஆசை பற்றி அறையலுற்றேன்... இராமன்