பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தொட்டனைத்துறும் மணற்கேணி அதே மாதிரிதான் இராவணன் கிட்டேபோய்ச் சொல்றான் அவன் மகன். ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை. அப்பா - இந்திரசித்து - நான் பேசுகிறேன். தகுதியற்றவன் இல்லே. சாதாரண ஆள் என்று நினைத்து விடாதே. இந்த உலகத்திலே இதை விட வெற்றி அடைய முடியாது. ஆதலால் தயவு செய்து போருக்குப் பயந்து விட்டேன் என்று நினைக்காதே. உன்மேல் காதலால் உரைத்தேன் - கடைசியாக, உனக்கு நான் செய்ய வேண்டிய கடமையைச் செய்ய வேண்டும். என்னைப் பெற்றதற் காக உன்னை வாழ வைக்க வேண்டும் என்று நினைக் கிறேன். 4 * - - - - - - - 'ஆசைதான் அச் சீதைபால் விடுதிஆயின் அனையவர் சீற்றம் தீர்வர் போதலும் புரிவர், தீமையும் பொறுப்பர்; உன்மேல் காதலால் உரைத்தேன்....... (கம்ப:யுத்த:இந்திரசி வதை, 7) இப்போது நினைத்துப் பாருங்கள். ஒரே பிள்ளை. எல்லாம் போயாச்சு. தம்பியும் போயாச்சு. இருக்கிறது அவன் ஒருத்தன் தான். அவனிடம் 'முன்னையோர் இறந்தார் எல்லாம் இப்பகை முடிப்பர் - என்றும் பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்றனர் பெயர்வர் என்றும் (கம்ப:யுத்த:இந்திரசி வதை.8)