பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 103 போடா போடா. உன்னப் பார்த்தா இந்தப் பகையைத் தேடிக் கொண்டேன். என்னையே நோக்கியான்இந் நெடும்பகை தேடிக் கொண்டேன் (கம்ப:யுத்த:இந்திரசி வதை.8) என்னையே என்று சொல்லுகிற ஆணவம் இருக்கே, அதுதான் பேராணவம். புத்திர வாத்ஸல்யத்தையும் தூக்கி எறிகிறது. புத்ர வாத்ஸல்யமே அடிபடுகிற போது பெண் டாட்டி எல்லாம் எங்கே இருக்கா? எல்லாம் போச்சு. அந்த ஆணவம் அண்டத்தை எல்லாம் தன்னுள் கொண்டு நிற்கிறது. அந்த நேரத்தில் ஆண்டவன் வருகிறான். நீ என்னிடம் வரவேண்டிய நிலையில் உள்ளாய். அந்த படலத்தைக் கிழித்து விடவேண்டும். இப்போது எல்லாம் நான் என்று நினைப்பது போக, எல்லாம் அவன் என்று நினைக்கிற நிலை. சூரபன்மன் வருகிறான். சின்னப் பையன் சண்டைக்கு வருகிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தவன் பார்த்தவுடனே கும்பிடவேண்டும் என்று அவன் மனம் எண்ணுகிறது. ஆனால் அப்படி நடவாமல், தடுத்தது மானம் ஒன்றே. சூழுதல் வேண்டும் தாள்கள் தொழுதிடல் வேண்டும் அங்கை தாழுதல் வேண்டும் சென்னி - துதித்திடல் வேண்டும் தாலு “... < (கந்தபுராணம் சூர்.வதை:444)