பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 105. அதே மாதிரிதான் இரணியன். எங்கடா நீ சொன் னவன். எங்கேடா உங்க நாராயணன்? அங்கே இருக் கானா? இங்கே இருக்கானா?” சாணினும் உளன்; ஒர்தன்மை அணுவினைச் சதகூறுஇட்ட கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந்நின்ற தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்... - (கம்ப.யுத்த:இரணிய.வதை:124) உங்களுக்குக் கதை தெரியும். அவன் சொன்னான் இந்தத் தூணைப் பிளக்கிறேன். அதனுள் அவன் இல்லை யாயின் இந்த வாளால் உன்னையும் கொன்று தின்பேன். அந்த ஆணவம், பேராணவம். அந்தப் பேராணவம் வரும்போது சாதாரண கடமையெல்லாம் கத்தரிக்காய். எல்லாம் விட்டு விடுங்க. இதெல்லாம் நம்ம மாதிரி ஆளுங்க பேசுற பேச்சு. அதைத் தாண்டிப் போகும்போது குற்றம் நீ குணங்கள் நீ (திருமு:3:52:1) பகையும் நீ நட்பும் நீ (கம்ப.கிட்கி:வாலிவதை:129) எங்கேயோ போய்விடுகிறது - அனைத்தையும் தழுவிக் கொள்கிறது. அப்போது நீ, நான் என்கிற பிரச்சினையே இல்லை. ஒருத்தன் தான் இருக்கிறான்.