பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 117 கவலைப்படாதே - எண்ணில் சிந்தித்துப் பார்த்தே யானால் 'நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை." நீ பெண்டாட்டி கூடவே இருந்து வாழ்கிறதனாலே அந்தக் கதிக்குப் போக முடியாதுன்னு நினைக்காதே. 'நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை: ஏன், தெரியுமா? கண்ணில்நல் லஃதுறுங் கழுமல வளநகர் பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே. (திருமு:3:24:1) அவனே பாசிடிவ், நெகடிவ் ஆக இருக்கும்போது எனக்கென்ன வந்திருக்கு? நான் ஏன் விடணும்? அப்படி வாழ்க்கையை முழுவதும் இறுதிவரை அநுபவித்துப் போகணும். அதுதான் சுந்தரமூர்த்தியி னுடைய வரலாறு. அதனாலே தான் பெண்டாட்டி கூடவே இருந்து கிட்டு 'யோகம் பண்ணினாரு எனப் பாடினார் சேக்கிழார். திருமந்திரத்திலே - பரியங்கயோகம். கட்டிலுக்கு போகம் பண்றதுன்னு பேரு. பெண்டாட்டியோடே இருந்து யோகம் பண்றதை முதன் முதலில் நம்ம ஆளுதான் கண்டுபிடித்தான், பரியங்க யோகத்தை. அதனாலே இது விலக்குரிய தன்று. அப்படீன்னு வந்த பிற்பாடு நீ புலனுக்கு அடிமையாகாதபடி இருந் தேன்னாத் தப்பு ஒன்றும் இல்லை.