பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 121 கெடுக உலகியற்றியான் என்றார். ஒரு பெரிய முனிவர். மகாராஜா வீட்டிலே போய்த் தங்கியிருந்தார். அந்த வீட்டு அம்மாவுக்குப் பிரசவ நேரம். பிரம்மா போனாராம். அது முனிவருக்குத் தெரிஞ்சது. எங்கடா போறேன் னார். அந்த பையன் தலையிலே எழுதப் போறேன் என்றார். சரின்னு வந்தான் எழுதிட்டு. என்னடா எழுதினேன்னு கேட்டார். 'ஏக ரிஷப ஜாதகம்’னு எழுதினேன்னான். இவர் அதை வெளியிலே சொல்ல முடியாது. தேவ ரகசியம் என்று பேரு. முனிவர் போயிட்டாரு. பத்து வருஷம் கழிச்சு வந்தாரு. எங்கடா ராஜான்னு கேட்டாரு. 'ராஜாவாவது - போய்ப் பல நாள் ஆயிப் போச்சுங்க” "பையன் பொறந்தானே?" - ஆமாங்க. ஒத்தமாட்டு வண்டி ஒட்டிக்கிட்டு இருக் கான். ' இவரு பார்த்தாரு முனிவரு அல்லவா - இப்படி யோசனை பண்ணினாரு. நேராப் பையன் விட்டுக்கு போனாரு அப்பா நான் உங்க அப்பாவுக்கு ஃப்ரெண்டுன்னாரு. சரி... அங்கே தங்கினாரு. அவனைப் பார்த்து 'நீ போயி இந்த மாட்டை வித்துட்டு வான்னாரு...' 'என்னய்யா எங்க அப்பாவுக்கு ஃப்ரெண்டுங்கறே. நான் பெர்ழைக்கிறது இந்த ஒத்த மாட்ட வச்சுத்தான். அதையும் போய் வித்துட்டு வாங்கிறேயேன்னான்.