பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தொட்டனைத்துறும் மணற்கேணி ‘'நீ கவலைப்படாதே. மாட்டை வித்துட்டு வந்துரு"ன்னாரு. சாமியார் சொன்னாரேன்னு மாட்டக் கொண்டு போயிப் பத்து ரூபாய்க்கு வித்தான். ராத்திரி ரொம்பச் சாப்பிட்டான். காலம்பற எழுந்திருச்சி பாத்தா ஒரு மாடு இருந்தது. அந்த மாட்டையும் கொண்டு போயி வித்துவிட்டு வந்து சாப்பிட்டான். இப்படிப் பதினைந்து நாள் மாடு வர்றது, விக்கறது, சாப்பிடறதுன்னு சென்றது. பிரம்மா பார்த்தான். 'அட நாசமாகப் போக உன்கிட்டச் சொல்லித் தொலைஞ்சு போக" என்றார். ஏன்னா 'ஏக ரிஷப ஜாதகம்'னா ஒரு ரிஷபத்தை அவனுக்கு சப்ளை செய்ய வேண்டியது பிரம்மாவி னுடைய வேலை. இவன் புத்திசாலித்தனமா... இப்பத் தெரிகிறதா. - ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றிக் தாழாது உஞற்று பவர் - (குறள்:620) தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (குறள்:619) எத்தனை குறளுக்குப் பொருள் வருகிறது பாருங்கள். எளிய கதையாக இருக்கலாம். ஆனால் இந்தக் கதையிலே எவ்வளவு பெரிய தத்துவத்தைக் கொண்டு போய் வச்சுருக்கார், பாருங்க. .