பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தொட்டனைத்துறும் மணற்கேணி துறை என்று வந்தால் அடுத்த பாட்டுக்குப் போய் விடுவோம். சான்றோர் கவி - அதைப் பார்த்தவுடன், ஏன்டா. அப்படிச் சொன்னான்' என்று கேட்டிங்கன்னா, உள்ளே தோண்டத் தோண்ட வரும். - மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை கோதாவரி யைப் போய்ப் பார்த்திருக்க முடியாது. தாமிர பரணியை இவர் பார்த்திருப்பார். அவர் பார்த்தார். எல்லாருக்கும் தெரிந்த மாதுளம் பழம் என்று சொன்னார். மாதுளம் பழத்தை எடுத்தால் மேலே தோல்.... அப்புறம் மெல் லிசா ஒரு படலம். ஆக... பெரியவர்கள் கவிதை மாதுளம் பழம்போலே என்று மகாவித்துவான் சொன்னார். கம்பன் கோதாவரி போலச் சான்றோர் கவிதை என்றான். வள்ளுவர், 'தொட்டனைத்துறும் மணற்கேணி என்றார். நீ தோண்டத் தோண்ட... உன்னுடைய முயற்சி எப்படியோ அப்படி நீ 90 வயதில்கூடத் தோண்டலாம். தோண்டுவதற்கு வயது வரம்பு கிடையாது. இந்த வயதில் படிச்சு என்ன ஆகப் போகுது என்று நினைக்காதே. இது வரையிலும் தெரியாதது தெரியும். இதனை உறுதியாகச் சொல்கிறேன். ஏவி. மெய்யப்ப செட்டியார் அவருடைய மகன் சரவணன் சொன்னாரு - அப்பா பேர்லே ஒரு அறக்கட்டளை வைக்கணும். ஒவ்வொரு வருடமும் யாராவது கம்பனைப் பற்றி ஒரு