பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 27 நூல்...! இஸ்மாயில் சொன்னார் டேய் நீ எழுதுடா. நான் கம்பனைப் பற்றி போதிய அளவு எழுதி விட்டேன். என்று மறுத்தேன். இஸ்மாயில் என்னென் னமோ சொல்லிப் பார்த்தார். சரவணனும் ஐயா நீங்கள் தான் எழுத வேண்டும்’ என்று சொல்ல நான் கம்பன் கழகத்திற்குப் போவதையே விடப் போகிறேன். இது வேறு உபத்திரவம்' என்றேன். இஸ்மாயில் டேய் நீதான் எழுதணும்' என்று சொல்ல, டேய் உன் கதையெல்லாம் என்கிட்ட பலிக்காது’ என்று மறுத்துவிட்டேன். என்னவோ அன்னைக்கு ராத்திரியோ அல்லது மறுநாள் காலம்பரையோ நான் தியானம் செய்து கொண்டிருந்தேன். ஒரு முழுமை யான எண்ணம் தோன்றியது. இது வரை நானும் ஏகப் பட்டது எழுதியிருக்கிறேன். ஏகப்பட்ட பேர் எழுதியிருக் கிறார்கள். பெரியவர்களில் இருந்து சின்னவர்கள் வரை எல்லாரும் எழுதியிருக்கிறார்கள். யாரும் புலனடக்கம் பற்றி எழுதவில்லை. புலனடக்கம் என்ற வார்த்தை யையும் கம்பனையும் இணைக்கவே இல்லை. அது எனக்குப் புரிந்தவுடனேயே இந்த முதல் பாட்டே இடிக்குது. *。 ஆசலம்புரி ஐம் பொறி வாளியும் - காசு அலம்பு முலையம் கண் எனும் பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக் கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம். . . (கம்ப. ஆற்றுப்படலம் - 1) தியானம் பண்ணும்போது இந்தப் பாட்டு வரக் காரணம் என்ன? . . . .