பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தொட்டனைத்துறும் மணற்கேணி தேவாரம், திருவாசகம் நினைப்பு வந்தால் சரி. ஒரு சம்பந்தமும் இல்லாமல் வந்தது. அதனை விட்டுவிட முயன்றேன். ஆனால், அந்தப் பாட்டு என்னை விடமாட் டேன் என்கிறது. பத்து பதினைந்து நிமிடங்களில் தெளிவு ஏற்பட்டது. ஆசலம் புரிஐம் பொறி வாளியும் காசு அலம்பு முலையவர் கண் எனும் பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக் கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம். (கம்ப. ஆற்றுப்படலம்) ஏன் இப்படி சொன்னான்? இதனை யாரும் எண்ணிப்பார்க்கவில்லை. ஒரு பெரிய காப்பியம் - இதில் புலனடக்கமே இல்லாத ஒரு பிரிவினர் இருக்குது. புலனடக்கத்திலேயே உயர்ந்து இருக்கிற ஒரு பிரிவினர் இருக்குது. இவர்க ளிடையே இடையிலே நம்மைப் போன்றவர்களும் - பொது ஜனமும் - இருக்கிறார்கள். புலன் அடக்கத்திற்கே பிறந்தவன் அனுமன். இராவணன் மாதிரி: "எவன் பெண்டாட்டியா இருந்தா என்ன, எனக்கு வேணும் அவ்வளவுதான். புலனடக்கமே இல்லாதவன். சுக்கிரீவன் மாதிரி ஆளுகள். கொஞ்சம் இங்கே கொஞ்சம் அங்கே. ஆனால் அவன் மேலே குற்றம் இல்லே. -